கோவையில் டிஸ்கவர் உலக சாதனையை மேற்கொண்ட சுட்டிகள் ..!

published 2 years ago

கோவையில் டிஸ்கவர் உலக சாதனையை மேற்கொண்ட சுட்டிகள் ..!

கோவை: கோவையில் ஈக்வல் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் டிஸ்கவர் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டு அசத்தினர்.

கோவை பி.என்.புதூர் பகுதியில் ஈக்வல் ஸ்போர்ட்ஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த அகாடமியில் பயிலும் 17 மாணவர்கள் வெவ்வேறு விதமான உலக சாதனை முயற்சிகளை மேற்கொண்டனர்.

டிஸ்கவர் உலக சாதனை முயற்சி களப்பணி அதிகாரி பாலாஜி, ஆசிய உலக சாதனை புத்தக மதிப்பீட்டாளர் சிவகுமாரன் முன்னிலையிலும், இந்த 17 மாணவர்களும் தனித்தனியே ஒரு  நிமிட சாதனைகளை மேற்கொண்டனர். அதன்படி, பென்சில் உடைத்தல், மூன்று அடி உயரத்தை நின்ற இடத்திலிருந்து குதித்து தாண்டுதல், ஒரு நிமிடத்தில் பலமுறை காலை விரித்து அமருதல், குறைந்த நிமிடத்தில் அனைத்து உலக நாடுகளின் பெயர்கள் மற்றும் தலைநகரங்களைக் கூறுதல் போன்ற பல்வேறு உலக சாதனை முயற்சிகளை மேற்கொண்டனர்.

இந்த சாதனைகளை மேற்கொண்ட மாணவர்களுக்கு மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், அகாடமியின் பயிற்சியாளர்கள் நித்யானந்த், பிரதீப், மதன் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe