கோவையில் கம்மவார் சங்கம் அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு!

published 2 weeks ago

கோவையில் கம்மவார் சங்கம் அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/Di5OOIMCPha6vMceSju9G7

கோவை: கோவையில் கம்மவார் சங்கத்தினர் அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கோவை மாவட்ட கம்மவார் சங்கத்தின் நிர்வாகிகள் பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது அச்சங்கத்தினர் கூறுகையில், “எங்கள் சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே எங்களது சங்கத்தின் விதி.


அவ்வாறு இருக்கும் போது சங்க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல் பீளமேடு கிளை தலைவர் கோபால் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் வேறொரு கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.

எனவே அவரை நாங்கள் சங்கத்திலிருந்து நீக்கிவிட்டோம். மேலும் வரும் லோக்சபா தேர்தலில் எங்கள் சமூகத்தை சேர்ந்த அ.தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம்.


எங்களது ஆதரவு அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு மட்டுமல்ல. எங்கள் சமுதாயத்தினர் போட்டியிடும் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவளிப்போம்.” என்றனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw