'கோவை ரைசிங்': கோவைக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இதோ!

published 2 weeks ago

'கோவை ரைசிங்': கோவைக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இதோ!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CQ78cBq2Gn00cQtG7fXjDn

கோவை: நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., சார்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.


இதனிடையே தி.மு.க., சார்பில் கோவை தொகுதிக்கான 49 பக்க தேர்தல் அறிக்கை "கோவை ரைசிங்" என்ற தலைப்பில், வெளியிடப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்,  தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் மகேந்திரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.


அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

கோவை நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் அமைப்பது விரிவுபடுத்தப்பட்டு, புதிதாக உருவான குடியிருப்பு மற்றும் தொழிலகப் பகுதிகளில் சிறந்த உட் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.


கோவையில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மாசு கட்டுப்படுத்தப்படும், ஏரிகளில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும். கோவையில் நகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும்

அவிநாசி ரோடு மற்றும் உக்கடத்தில் அனைத்து மேம்பால கட்டுமான பணிகளும் விரைந்து முடிக்கப்படும். சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டப்படும்.


ரிங் ரோடு சாலை பணிகள் விரிவுபடுத்தப்பட்டு அதன் இணைப்பு சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படும். அவிநாசி ரோட்டில் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி விரிவுபடுத்தப்படும்.

எல்&டி பைபாஸ் சாலை நான்கு வழிச்சாலையாக்கும் பணிகள் நிறைவுபடுத்தப்படும். கோவையில் 81 கிலோமீட்டர் நீளத்திற்கான கிழக்கு சுற்றுவட்ட சாலை நரசிம்மநாயக்கன்பாளையம் முதல் மதுக்கரை வரை அமைக்கப்படும்.


வெள்ளலூர் குப்பை கிடங்கில் கழிவுகள் கொட்டப்படுவதை குறைக்க குப்பைகள் பெறப்படும் இடங்களிலேயே குப்பைகளை தரம் பிரித்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்படும்.

சங்கனூர் கால்வாய் புனரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்படும். வெள்ளலூர் குப்பை கிடங்கு சீரமைக்கப்பட்டு அந்த நிலம் நகரின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும்.


கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படும். வால்பாறை சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்பட்டு மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு இடங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட சுற்றுலா திட்டங்கள் உருவாக்கப்படும்.

நவம்பர் 24ஆம் தேதி அன்று கோவை தினம் மற்றும் கோவை விழா அரசு ஆதரவுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் நிரந்தர மருத்துவ முகாம்களை அமைத்து சிபிஆர் கருவிகள் மற்றும் உயிர்காக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.


கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைந்து முடிக்கப்படும், நில உரிமையாளர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

விமான நிலைய ரயில் நிலையம் அமைக்கப்படும் நீர்வாரிய சாலை வேலைகள் விரைந்து முடிக்கப்படும். தென்மாவட்டங்களுக்கு இரவு நேர ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும்.


துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச மையங்களுக்கு புதிய விமான சேவைகள் தொடங்கப்படும். பொள்ளாச்சி மேட்டுப்பாளையம், பாலக்காடு, திருப்பூர், ஈரோடு என நான்கு திசைகளிலும் மின்சார ரயில்கள் அதிகரிக்கப்பட்ட சேவையுடன் இயக்கப்படும்.

விளாங்குறிச்சி திட்ட சாலை வேலைகள் விரைந்து முடிக்கப்படும். சென்னை, கோவை தூத்துக்குடி இடையே பிரத்தியேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும்.


மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும்.

கோவை நகரில் 5 ஆண்டுகளுக்குள் பசுமை போர்வையை இரட்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலை பயன்பாட்டிற்காக நகராட்சி கழிவு நீரை சுத்திகரிக்க டிடிஆர்ஓ கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும்.


கோவையில் புதிய ஐஐஎஸ்சி மற்றும் ஐஐஎம் ஆகியவை தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பெண்களுக்கான எஸ்டிஇஎம் (STEM) திறன் மேம்பாட்டு திட்டம் விரிவுபடுத்தப்படும். காற்றாலை உற்பத்தி சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தக் கூடிய வகையில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டு காற்றாலை  ஊக்கமளிக்கும் வகையிலான கொள்கை அமைக்கப்படும்.


குறைந்தபட்சம் இரண்டு புதிய பசுமை தொழில் பூங்காக்கள் நிறுவப்படும். தொழில் நுட்ப ஜவுளி துறையில் உள்ள எம்.எஸ்.எம்.இ., நவீன மயமாக்கல் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அரசு மானியங்கள் மூலம் ஊக்குவிக்கப்படும்.

சூலூர் ஏரோ பார்க் திட்டம் விரைந்து முடிக்கப்படும். கோவையில் புதிய பூத்தொழில் ஹைப் தொடங்கப்படும்.


சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் புதிய பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான புதிய நிரந்தர கண்காட்சி அரங்கம் நிறுவப்படும். கொடிசியா அரங்கத்தை சுற்றி பசுமை வளாகம் உருவாக்கப்படும்.

மேற்கூரை சூரிய ஆற்றல் பேனல்களுக்கான tangedco நெட்ஒர்க் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிரில் உற்பத்தியாளர்களுக்கு ஒரு சிக்கோ பூங்கா உருவாக்கப்படும்.


கோவையில் தனியார் பங்கு மற்றும் மூலதன நிதி அமைப்பை உருவாக்கி கோவை நிதி மாவட்டத்தை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தொழில்துறைக்கான ஆட்டோமொபைல் ட்யூனிங் மற்றும் டெஸ்டிங் மையமாக கோவை உருவாக்க உதவிகள் வழங்கப்படும்.

வேலை செய்யும் தாய்மார்களுக்கு குழந்தை பராமரிப்பு மையங்களை உருவாக்க தொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். செங்கல் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை கவனித்து தீர்க்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.


தென்னை விவசாயிகளின் விருப்பத்திற்கு இணங்க நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய பருத்தி கழகத்தின் கிடங்கு அமைப்பதற்கான நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும் தொழிலாளர் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான ஊக்கத்தொகைகள் வழங்கப்படும்.


நாரிலை மீதான பிஐஎஸ் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

உட்பட பல்வேறு அம்சங்கள் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.


இந்த தேர்தல் அறிக்கைக்கான உங்கள் மதிப்பீட்டை கோவை  மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக எங்களது WhatsApp சேனலில் பதிவு செய்யுங்கள் : https://whatsapp.com/channel/0029VaBGFq7JZg4EvHELBx3R

பா.ஜ.க.,வின் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கைக்கு கிடைத்த மதிப்பீடுகள் உங்கள் பார்வைக்கு:





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw