ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்டைலிஷ் கூல் லுக்!

published 10 months ago

ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்டைலிஷ் கூல் லுக்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியிலாக திரை துறைக்கு அறிமுகமானவர்  ஐஸ்வர்யா ராஜேஷ். மானாட மயிலாட டான்ஸ் ஷோவில் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்று டைட்டில் வின்னராகவும் கலக்கினார்.

வெள்ளைத்திரையில் கடந்த 2010ம் ஆண்டு நீதானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.  தொடர்ந்து உயர்திரு 420, அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, வட சென்னை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், ஃபர்ஹானா ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.  

தமிழ் படங்களை தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும்  கவனம் செலுத்தி வருகிறார். கைவசம் ஏகப்பட்ட படங்களுடன் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோஷூட் செய்வதிலும் அதிக ஆர்வம் உடையவர்.

அந்தவகையில் தற்போது போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe