ரயில்வே போலீஸ் வேலை: 4660 காலியிடங்கள்.. டிகிரி போதும்... ரூ.35 ஆயிரம் வரை சம்பளம்!

published 2 weeks ago

ரயில்வே போலீஸ் வேலை: 4660 காலியிடங்கள்.. டிகிரி போதும்... ரூ.35 ஆயிரம் வரை சம்பளம்!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

ரயில்வே பாதுகாப்பு படையில் (Railway Protection Force) காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4660 எஸ்.ஐ மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க   14.05.2024 கடைசி தேதி.

சப் இன்ஸ்பெக்டர் (Sub - Inspector)


காலியிடங்களின் எண்ணிக்கை: 452

ஆண்கள்: 384


பெண்கள்: 68

சம்பளம்: ரூ. 35,400


கல்வி

இந்த பணியிடங்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு  

01.07.2024 அன்று 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.


கான்ஸ்டபிள் (Constable)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4,208


ஆண்கள்: 3,577

பெண்கள்: 631


சம்பளம்: ரூ. 21,700

கல்வி


இந்த பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு


01.07.2024 அன்று 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு முறை


இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு  மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழி தேர்வு 120 மதிப்பெண்களுக்கு 90 நிமிட கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் பொது அறிவு (General Awareness) 50, திறனறிதல் (General Intelligence & Reasoning) 35, கணிதம் (Numerical Aptitude) 35 என மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்படும்.


எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500,  SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250 வசூலிக்கப்படும்.


மேலும் விவரங்கள்

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினை பார்க்கவும்.


 

ரயில்வேயில் வேலை: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...! விவரங்கள் இதோ!
 




சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw