தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மாநாடு- கோவையில் தென்னை பாக்கு ஏற்றுமதி மையம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்...

published 4 days ago

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மாநாடு- கோவையில் தென்னை பாக்கு ஏற்றுமதி மையம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்...

கோவை: கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள கேரளா கிளப் கூட்ட அரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட 15 வது பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் வகித்தார். இந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அவர்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

 

இந்த மாநாட்டில் விவசாய கடன்கள் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய விளைபொருள் விலை நிர்ணயத்தில் முனைவர் எம் எஸ் சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்திட வேண்டும், விவசாயிகளுக்கு வயது முதிர்வின் பொழுது மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மத்திய அரசும் மாநில அரசும் விவசாயிகளுக்காக தனி பட்ஜெட் உருவாக்க வேண்டும். 

நொய்யல் விவசாயிகள் பாசன சபை அமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும், கோவையில் தென்னை பாக்கு விளை பொருள் ஏற்றுமதி மையம் உருவாக்கப்பட வேண்டும், ஆனைமலை ஆறு நல்லாறு பாண்டியாறு புன்னம்புழா பாசன திட்டம் மற்றும் ஆனைமடுவு அணைக்கட்டு திட்டம் அமைக்கப்பட வேண்டும்.

வனவிலங்குகள் வாழும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், வனவிலங்குகள் மூலம் ஏற்படுகின்ற உயிர் சேதம் பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்து உடனடியாக இழப்பீடு தொகையை கேரளாவை போல் இரு மடங்கு வழங்க வேண்டும், தென்னக நதிகளை ஒருங்கிணைத்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe