புதைக்குழிகள் இருக்கலாம்.. குளம் குட்டைக்கு போகாதீங்க.. கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு!

published 1 week ago

புதைக்குழிகள் இருக்கலாம்.. குளம் குட்டைக்கு போகாதீங்க.. கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CFoSUzRjtqAEmBrOacEIKZ

கோவை: கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணியில் குளிக்கச் சென்ற போது  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கோவை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் குளிக்கவோ மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்குக்காகவோ செல்வதை தவிர்க்க வேண்டும் ஏன கோவை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

கோவை மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குளிக்க செல்லும் பொழுது நீர்சூழல் (அ) சேறுகளின் புதைக்குழிகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.


எனவே, கோவை மாவட்டம் முழுவதும் 10 அடி ஆழத்திற்கு மேல் உள்ள குளம் மற்றும் குட்டைகளில் எச்சரிக்கை பலகை அமைத்திட பொதுப்பணித்துறை/நீர்வள ஆதாரத்துறை/கிராம பஞ்சாயத்துக்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் குளிக்கவோ மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்குக்காகவோ செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw