ஃபேமிலி ஸ்டார் திரைப்படம்.. OTT ரிலீஸ் எப்போது?

published 1 week ago

ஃபேமிலி ஸ்டார்  திரைப்படம்.. OTT ரிலீஸ் எப்போது?

ஒவ்வொரு வார இறுதியிலும் ஒ.டி.டி.,யில் புது புது படங்கள் வெளியாவது வழக்கமாக உள்ளது. கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு  ஓ.டி.டி.,யின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம்.

அந்த வகையில், ஓடிடியில் ஏராளமான படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி வருகிறது. ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி படங்களுக்கும்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  





இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணால் தாகூர் நடிப்பில் வெளியான, 'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா கடைசியாக சமீப காலமாக நடித்து வரும் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி வருகின்றன.  




கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் தேவார கொண்டா   'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் கை கோர்த்தார்.  இந்த படத்தில்  சென்சேஷனல் நாயகியாக வலம் வரும் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்திருந்தார்.  





ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் ஏப்ரல் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களையே பெற்ற இந்த படம்  பாக்ஸ் ஆபிசில் 19 கோடி மட்டுமே வசூல் செய்தது. தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  ஏப்ரல் 26 (நாளை)   அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw