ப்ளாக் தண்டர் விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்ட நடிகை ஸ்ருஷ்டி..!

published 9 months ago

ப்ளாக் தண்டர் விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்ட நடிகை ஸ்ருஷ்டி..!

மேட்டுப்பாளையம்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில்  பிளாக் தண்டர் தீம் பார்க் அமைந்துள்ளது. கோவையில் இருந்து  40 கிமீ தொலைவிலே அமைந்துள்ளதால் கோவை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தலமாக உள்ளது.

தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் குளிர்ச்சியான நீர் நிலைகளில் ஆட்டம் போட பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் பிளாக் தண்டரில் பல்வேறு வகையான நீர் விளையாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில் நடிகை ஸ்ருஷ்டி ப்ளாக் தண்டர் விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மும்பையை பூர்விகமாக கொண்ட ஸ்ருஷ்டி டாங்கே, கடந்த 2010 ஆம் ஆண்டு யாதுமாகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.  இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து புத்தம் புது காலை திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

விஜய் டிவியின்  பிரபலமான  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக அறிமுகமான இவருக்கு, திரைப்படங்களில்  கிடைத்த வரவேற்பை விட,  குக் வித் கோமாளி நிகழ்ச்சி  மிகவும் பிரபலமாக்கியது.

சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ருஷ்டி அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்வார்.  தற்போது ப்ளாக் தண்டர்  தீம் பார்க் விளம்பர ஷூட்டிங்கில் நடித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe