தமிழகத்தில் அமைய உள்ள சுதந்திர தின அருங்காட்சியகம்- மக்களின் பங்களிப்பை நாடும் அரசு- பொதுமக்கள் செய்ய வேண்டியவை...

published 9 months ago

தமிழகத்தில் அமைய உள்ள சுதந்திர தின அருங்காட்சியகம்- மக்களின் பங்களிப்பை நாடும் அரசு- பொதுமக்கள் செய்ய வேண்டியவை...

கோவை: தமிழ்நாடு அரசு 75-வது சுதந்திர தினவிழாவின் போது இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தது.

சென்னை மெரினா கடற்கரையின் எதிரில் பாரம்பரியக் கட்டடமான ஹூமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இவ்வருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. 

பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இரட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ அஞ்சல் தலைகள் மற்றும் ரூபாய் நோட்டுகள் மேலும், சுதந்திரப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள அரியப் பொருட்களை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமோ, சென்னை அருங்காட்சியகம் அல்லது கோவை நேரு விளையாட்டரங்கில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்திலோ நேரிடையாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகை கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையர், அவர்களால் வழங்கப்படும்.

இவ்வாறான அரியப் பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம் பெறும். ஆகவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்கள் அமையவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்குவதற்கு அருங்காட்சியகத் துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு 9344643422 எனும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe