கோவையில் ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தடுப்பூசிமுகாம்- நாட்கள் அறிவிப்பு...

published 9 months ago

கோவையில் ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தடுப்பூசிமுகாம்- நாட்கள் அறிவிப்பு...

கோவை: கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கோவை மாவட்டத்திலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி (Meningococcal and Seasonal Influenza Vaccine) மற்றும் சொட்டு மருந்து (Oral Polio Vaccine) ஆகியவை செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தான அறிக்கையில், 
இந்த புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இச்சிறப்பு முகாம்  13.05.2024, 14.05.2024 மற்றும் 15.05.2024 (திங்கள், செவ்வாய், புதன்) ஆகிய தினங்களில் நடைபெற இருக்கிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவுள்ளனர். இதில் முதல் நாள் 13.05.2024 அன்று 120 நபர்களுக்கும், இரண்டாம் நாள் 14.05.2024 அன்று 119 நபர்களுக்கும், மூன்றாம் நாள் 15.05.2024 அன்று 115 நபர்களுக்கும் என மொத்தம் 354 பயணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இதில் 65 வயதுக்கு மேற்பட்ட 49 நபர்களுக்கு மட்டும் Seasonal Influenza Vaccine பிரத்தியோகமாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe