தேசிய அடையாள அட்டை வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு...

published 9 months ago

தேசிய அடையாள அட்டை வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு...

கோவை: கோயம்புத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (UDID. unique Disability ID Card)-க்கு பெற்றிடவும் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை பெறப்படாத மாற்றுத்திறனாளிகளும், புதியதாக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளும் உடனடியாக தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கலர் நகல், ஆதார் அட்டையின் கலர் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கலர்-1 ஆகிய சான்றுகளுடன் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டோ அல்லது மாற்றுத்திறனாளிகள் நேரில் வராமல் அவருடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் மேற்குரிய ஆவணங்களுடன் 30-06-2024க்குள் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0422 2380382 ல் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe