ஐ.டி வேலைவாய்ப்பு: டிகிரி தகுதி.. சீக்கிரம் விண்ணப்பிங்க!

published 9 months ago

ஐ.டி வேலைவாய்ப்பு: டிகிரி தகுதி.. சீக்கிரம் விண்ணப்பிங்க!

முன்னணி ஐ.டி நிறுவனமான (accenture) அக்சென்ச்சர் நிறுவனத்தில் காலி பணியிடங்கள் அறிவுப்பு வெளியாகியுள்ளது.

அக்சென்ச்சர் ஐ.டி நிறுவனம்   இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வருகிறது. தமிழகத்தில்  சென்னை, கோவையில் செயல்படுகிறது.  தற்போது இந்த நிறுவனத்தில் குவாலிட்டி இன்ஜினியர் (Quality Engineer) பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும்  உள்ள நபர்கள் இதற்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.  தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்படுவர்.

கல்வி

இந்த பணிக்கு டிகிரி அல்லது பொறியியல் முடித்திருக்க வேண்டும். Selenium, Appium உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி ஆட்டோமேடட்டெஸ்ட் ஸ்கிரிப்ட் உருவாக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  Functional Test Planning தெரிந்திருக்க வேண்டும்.

அனுபவம்

இந்தப் பணிக்கு 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ள நபர்கள்  விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை  

இந்த பணிக்கு அக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆனால் விண்ணப்பிக்க கடைசி தேதி எதுவும் குறிப்பிடவில்லை. வேலை தேடும் விருப்பம் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe