மலரின் கோலங்கள்... அசரடிக்கும் அழகில் ஸ்ருஷ்டி!

published 8 months ago

மலரின் கோலங்கள்... அசரடிக்கும் அழகில் ஸ்ருஷ்டி!

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மும்பையை பூர்விகமாக கொண்டவர் ஸ்ருஷ்டி. சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையால், கடந்த 2010 ஆம் ஆண்டு  யாதுமாகி  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து 'மேகா' என்ற படத்தில் ஹோம்லி லுக்கில்   நடித்து ரசிகர்கள் மத்தியில்  பிரபலமானார். இவர் ஒரு சில படங்களிலே நடித்துள்ளார். சிருஷ்டியை 'கன்னக்குழி   அழகி' எனவும்  ரசிகர்கள் இவராவ் செல்லமாக அழைக்கின்றனர்.  

விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான  தர்மதுரை படத்தில் சில காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார். சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் . ஆனால் இவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை.

சின்னத்திரையில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் குக்காக அறிமுகமான இவருக்கு, திரைப்படங்களில்  கிடைத்த வரவேற்பை விட, இந்த  நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்காகவே இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் கூடியது.

பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் போட்டோஷுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். 
சோஷியல் மீடியாவில் தனது புகைப்படங்களை  அடிக்கடி  பகிர்ந்து ரசிகர்களை  குஷிப்படுத்துவார். என்னதான் மாடர்ன் உடையில் இவர் அதிக போட்டோஷுட் எடுத்தாலும், புடவையிலும் அடிக்கடி தலைகாட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe