அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி?- அண்ணாமலை பதில்...

published 8 months ago

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி?- அண்ணாமலை பதில்...

கோவை: டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 

அப்போது பேசிய அவர் அண்ணாமலையும் ஆட்டுக்குட்டியும் என ஊடகங்களில் வெளியாவது குறித்து கேட்டதற்கு, அண்ணாமலை மீது கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள், ஆட்டை அடிக்க வேண்டாம் என்றார்.
அதிமுக, பாஜக இணைந்து போட்டியிட்டால் 30 முதல் 35 இடங்களை தமிழகத்தில் வென்றிருக்க முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் 

எஸ் பி வேலுமணி கூறியது குறித்து கேட்டபோது, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.
மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, தவறான புள்ளி விவரங்களை கொடுத்துள்ளார் என்றார்
கோவை மக்கள் அதிமுகவை புறக்கணித்து விட்டதாக கூறிய அண்ணாமலை, தற்போது நடந்து முடிந்த தேர்தலில், பாஜக அதிக எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றுள்ளதாக கூறினார். 

படிப்படியாகத்தான் வெற்றியை எட்ட முடியும் எனக் கூறிய அவர் பாஜக கோவையில் அதிகமாக வாக்குகள்  பெற்று, இரண்டாம் இடத்தில் முன்னேறி உள்ளது என்றார். எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி வேலுமணி இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது, அதை அவர்கள் முதலில் சரி செய்து கொள்ளட்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe