சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்- கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதி மொழி...

published 8 months ago

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்- கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதி மொழி...

கோவை: இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும் அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உடன் மாணவர்கள்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe