வங்கியில் வேலை: 150 பணியிடங்கள்... யார் விண்ணப்பிக்கலாம்?

published 8 months ago

வங்கியில் வேலை: 150 பணியிடங்கள்... யார் விண்ணப்பிக்கலாம்?

எஸ்பிஐ வங்கி சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 150 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?  கல்வி தகுதி? உள்ளிட்ட விவரங்களை காணலாம்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சிறப்பு அதிகாரி (SO) பிரிவில் வர்த்தக நிதி அதிகாரி (Trade Finance Officer)  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிக்க  வேண்டும்  கமர்ஷியல் வங்கிகளில் குறைந்தது 2 ஆண்டுகள் ட்ரேட் பைனான்ஸ் பிரிவில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வின்  அடிப்படையில் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவர். கொல்கத்தா,  ஐதராபாத்தில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe