பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு விரைவில் 'டும் டும் டும்'!

published 8 months ago

பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு விரைவில் 'டும் டும் டும்'!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் நடைபெற உள்ளது.

கடந்த 2016 ல்  வெளிவந்த அருவி படத்தில் பிரதீப் ஆண்டனி துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர்  வாழ் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.  தொடர்ந்து இவரது நண்பரும், நடிகருமான கவினுடன் இணைந்து டாடா படத்தில்  நடித்திருக்கிறார்.

Bigg Boss 7 tamil fame Pradeep Antony has got engaged yesterday photo gets  viral | Bigg Boss Pradeep Engaged : நடக்காதுன்னு நினைச்சேன்! என்னை நம்பி  பொண்ணு கொடுக்குறாங்க... நிச்சயதார்த்த ...

விஜய் டிவியில் ஒளி பரப்பான பிக்பாஸ்7 சீசனில் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார். ஆனால் சில காரணகளுக்காக  ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதுபெரும் பேசு பொருளாக சமூக வலைத்தளங்களில் சில நாட்கள் ட்ரெண்டானது. இதில் பிரதீப்க்கு ஆதரவாக பல குரல்கள் ஒலித்தன.

Image

இந்த நிலையில், பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.  அதில்  வருங்கால மனைவியுடன்  இருக்கும் நிச்சயதார்த்த படங்களை  பகிர்ந்துள்ளார்.  விரைவில்  தனது நீண்ட நாள் காதலியை அவர் கரம்பிடிக்க  உள்ளார்.

Image

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இந்த ஜோடிக்கு  தங்களது  வாழ்த்துக்களை தெரிவித்து  வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe