தமிழக அரசை மக்கள் கண்டிக்க வேண்டும்- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் பேட்டி...

published 7 months ago

தமிழக அரசை  மக்கள் கண்டிக்க வேண்டும்- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் பேட்டி...

கோவை: கோவை ராம் நகர் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட இந்து வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் அறிமுக கூட்டம் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த இணைப்பு விழா மற்றும் அறிமுக கூட்டத்திற்கு சுமார் 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


இதில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சங்கம் எழுச்சியோடு நடந்து வருகிறது.
நியாமான முறை நடை பெற்று வருகிறது 
இதில் செய்யக்கூடிய வியாபாரங்கள் அனைத்தும் சுதேசி பொருட்கள்.

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பள்ளி கூட்டங்களில் பொட்டு வைக்க கூடாது என அறிக்கை கொடுத்து உள்ளார் . அவர் ஒரு நக்சலைட் போல செயல்படுகிறார். என்று கூறிய காடேஸ்வரன்
சிலுவை தொப்பி பர்தா என சொல்ல வில்லை .கோவை முஸ்லிம் தாயது கட்டு வருகிறது இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.

கோவை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் போதை பொருள் அதிகமாக உள்ளது.போதைப் பொருளில் கோடி கணக்கான ரூபாய் வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை நெடு காலமாக நடந்து வருகிறது .தமிழக அரசை  மக்கள் கண்டிக்க வேண்டும் .பாடம் புகட்ட வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் தேர் இழுக்கிறார்கள். தேரின் உடைய அனைத்து இடங்களையும் ஆய்வு செய்திருக்க வேண்டும். அந்த கயிறு பலம் இல்லாமல் அறுந்து போகிறது.இதற்குக் காரணமான அற நிலை துறை அமைச்சர் மீது வன்மையாக கண்டிக்கிறோம். 

கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்து உள்ளார்கள் . பத்து லட்சம் கொடுத்தால் போதுமா அவர்களுடைய வாழ்வாதாரத்தை எப்படி மேம்படுத்துவது என்பதை அரசு சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe