விஜய் சேதுபதியின் 'மகாராஜா' ஓ.டி.டி., ரிலீஸ்... எதில் வெளியாகிறது தெரியுமா?

published 7 months ago

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' ஓ.டி.டி., ரிலீஸ்... எதில் வெளியாகிறது தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தின் ஓ.டி.டி., ரிலீஸ் குறித்த அப்டேட்  வெளியாகியுள்ளது.

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  இந்தப் படம் மக்கள் மத்தியில்  வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படம் ரிலீஸ் எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்!

படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து மகாராஜா படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியான முதல் பத்து நாளில் ரூ. 81 கோடி வசூலித்துள்ளது.  விரைவில்  ரூ.100 கோடி வசூலை பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஜா திரைப்படம் ஓ.டி.டி தளத்தில்  எப்போது  வெளியாகும் என  ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, வரும் ஜூலை 19 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe