கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நடைபெறும் தேதிகளை அறிவித்த மாவட்ட ஆட்சியர்...

published 7 months ago

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நடைபெறும் தேதிகளை அறிவித்த மாவட்ட ஆட்சியர்...

கோவை: கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், கொடிசியா, இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவின் 8 வது பதிப்பு வருகின்ற ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் 250 அரங்குகளில் இலட்சக் கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து புகழ்பெற்ற பதிப்பாளர்கள் இந்த புத்தக்க கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

இப்புத்தக திருவிழாவினை  அமைச்சர் பெருமக்கள் துவக்கி வைக்க உள்ளார்கள். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகர காவல் ஆணையர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர்,
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்
கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்விழாவில் தினந்தோறும் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும். கலைஞர்களும், கலந்துகொள்ளும் கலை. இலக்கிய நிகழ்வுகள், சிறப்பு நிகழ்ச்சிகள் கவி அரங்கம், கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, நாடகம், விழிப்புணர்வு நாடகம், உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்ளவேண்டும். புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் 10 நாட்கள் நடைபெறும் இப்புத்தக கண்காட்சியில் புத்தக ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி  கேட்டுக்கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe