பெண்களிடம் அத்துமீறும் பெரியகடை வீதி வியாபாரிகள்!

published 7 months ago

பெண்களிடம் அத்துமீறும் பெரியகடை வீதி வியாபாரிகள்!

கோவை; கோவை பெரியகடை வீதியில் பெண்களிடம் அத்துமீறும் கடை வியாபாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை பெரியகடை வீதியில் திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு போன்ற பிற மாவட்டங்களில் இருந்து பொருட்களை வாங்க நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் அங்கு சாலையோரம் வைக்கப்பட்டு உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொது மக்களை கட்டாயப்படுத்தி  எங்கள் கடைக்கு வாருங்கள் வாங்குங்கள் என பெண்களிடம் அத்துமீரும் கடைதெரு ஊழியர்கள், சிலர் போதையில் பெண்களிடம், பொதுமக்களிடம் தகராறு செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அதனை காவல்துறை கண்டு கொள்ளவில்லை எனவும் பதிவு செய்யப்பட்டு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் பெரியகடை வீதியில் பொதுமக்கள் சுதந்திரமாக தனக்குப் பிடித்த கடையில்  சென்று பொருட்கள் வாங்க தடை செய்து அத்துமீறும் இவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுத்து முற்றுப் புள்ளி வைக்கப்படுமா ? என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் நிம்மதியாக அப்பகுதியில் சென்று பொருள்கள் வாங்க முடியும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/30KVqcV9RGI

https://youtu.be/D2WAVKgkpfc

https://youtu.be/7ciDCjzjxok

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe