தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இளமறிவியல் மாணவர் சேர்க்கை- மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு...

published 6 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இளமறிவியல் மாணவர் சேர்க்கை- மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு...

கோவை: இந்த கல்வியாண்டு முதல் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் (TNAU), தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் (TNJFU) மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் (வேளாண்மைப் பிரிவு, (AU)) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டிற்கும் (Academic Stream) மற்றும் 7.5% இடஒதுக்கீட்டிற்கும் இணையதளவழி கலந்தாய்வு 23.06.2024 முதல் 26.06.2024 வரை நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பொதுக்கல்விப்பிரிவில் (Academic Stream) நகர்வு மேல் முறையில் ஏற்பட்ட காலியிடங்களுக்கு மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 26.07.2024 அன்று மொத்தம் 1300 இடங்களுக்கு நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ / மாணவியருக்கு தற்காலிக சேர்க்கை அவர்கள் பெற்ற தரவரிசை மதிப்பெண், விருப்பப்பாடம் மற்றும் சாதிய அடிப்படையில் வழங்கப்பட்டன.

அவ்வாறு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட மாணவ/ மாணவியர். தங்களின் அசல் சான்றிதழ்களான (10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ் (Community Certificate) மற்றும் மாற்றுச் சான்றிதழுடன் (Transfer Certificate) கோவை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் 26.07.2024 அன்று நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு தங்களின் சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இத்தகவல்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட மாணவ/ மாணவியர்களுக்கு அவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் (email) முகவரிக்கும் மற்றும் அலைபேசி எண்ணிற்கும் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவ/மாணவியர்களின் பட்டியல் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

மாணாக்கர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய [email protected] என்ற மின்னஞ்சல் (email) மூலமாகவும் 9488635077,
9486425076 என்ற அலைபேசி எண்களிலும் வாரநாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe