மத்திய பட்ஜெட்- கோவிந்தா கோவிந்தா பாடல் பாடி காதில் பூக்களை சுற்றி கொண்டு கோவையில் ஆர்ப்பாட்டம்...

published 6 months ago

மத்திய பட்ஜெட்- கோவிந்தா கோவிந்தா பாடல் பாடி காதில் பூக்களை சுற்றி கொண்டு கோவையில் ஆர்ப்பாட்டம்...

கோவை: மத்திய பட்ஜெட் நேற்று அறிவிக்கப்பட்ட  போது பிற மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் நிதிகள் தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதிகளை போல் தமிழ்நாடு வெள்ள நிவாரணத்திற்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பலரும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் மூலம் ஒன்றிய அரசும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழ்நாட்டு மக்கள் காதில் பூச்சுற்றி விட்டதாக கூறி காதில் பூக்களை சுற்றிக்கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவிந்தா கோவிந்தா பாடல்களை பாடி தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கபடாததை சுட்டிக்காட்டினர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், தமிழ்நாட்டிற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களுக்கு நிதி வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் பலமுறை தெரிவித்தும் எவ்வித அறிவிப்பையும் சிறப்பு திட்டங்களையும் நிதிகளையும் ஒதுக்காமல் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்து உள்ளதாக விமர்சித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe