11 நாள் உணவிற்கு 27 லட்சம்- கோவை மாநகராட்சியின் விளக்கம்...

published 6 months ago

11 நாள் உணவிற்கு 27 லட்சம்- கோவை மாநகராட்சியின் விளக்கம்...

கோவை: கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் சாதாரண மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில்  333 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 318 வது தீர்மானமாக 
கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம்  தேதி முதல் 17 ம் தேதி வரை தீப்பிடித்து தொடர்பாக  தீயை அணைக்க 76 லட்சத்து 70 ஆயிரத்து 318 ரூபாய் செலவிடப்பட்டதாகவும் இந்த செலவினத்திற்கு ஒப்புதல் அளிக்கவும் தீர்மானம் முன் வைக்கப்பட்டது. 

 

அதிலும் உணவு,தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றிக்கு 27 லட்சத்து 51 ஆயிரத்து 678 ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்திற்கு  கூட்டத்தில் ஒப்புதலும் வழங்கப்பட்ட நிலையில்  இது குறித்து கோவை மாநகராட்சி விரிவான அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


அந்த அறிக்கையில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீப்பிடித்ததில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் பரவி  எரிந்தன. அப்போது கோவை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது, சராசரியாக 13 தீயணைப்பு வாகனங்களும்,  அதை இயக்க ஒரு வாகனத்திற்கு 14 பேரும்  பணிபுரிந்தனர்.
இந்த தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய தண்ணீர் லாரிகள் நாள் ஒன்றுக்கு 23 முதல் 42 லாரிகள் வரை பயன்படுத்தப்பட்டது.


தீ உச்சம் பெற்று எரிந்த  12  நாட்களில் தினமும் சுமார் 500 முதல் 600 நபர்கள் சுழற்சி முறையில் 3 குழுக்களாக அமைத்து 24 மணி நேரமும் பணியாற்றினர்.
தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவக் குழுவினர் என மூன்று குழுக்களாக அமைத்து 24 மணி நேரமும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தினமும் காலை, மதியம், இரவு 3 வேளைகளும் தரமான உணவு வழங்கப்பட்டதுடன், வெயில் காலம் என்பதால்  குடிநீர் ,மோர் , பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது.

இந்த தீத்தடுப்பு பணிகளில் செலவினமாக 27.52 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
இந்த செலவினங்கள் இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பார்வைக்கும் , பதிவிற்கும் வைக்கப்பட்டது. தீ தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு அதை கட்டுக்குள் கொண்டு வந்த மாநகராட்சி ஆணையர், அலுவலர்கள் மற்றும்  பணியாளர்களுக்கு மாமன்ற  கூட்டத்தில் துணை மேயர் , மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது என அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe