மண்ணுயிர் காத்து மன்னூயிர் காப்போம் திட்டத்தின் கீழ் வேப்பங்கன்றுகள் விநியோகம் செய்ய தயார்...

published 6 months ago

மண்ணுயிர் காத்து மன்னூயிர் காப்போம் திட்டத்தின் கீழ் வேப்பங்கன்றுகள் விநியோகம் செய்ய தயார்...

கோவை: வேளாண்மைத் துறையின் கீழ் தமிழக முதல்வர்  சிறப்புத் திட்டமான முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னூயிர் காப்போம் திட்டத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கீழ் வேப்பங்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களின் தயாராக உள்ளது.

இது குறித்தான செய்தி குறிப்பில்,

தற்போது உள்ள நவீன கால தொழில்முறையில் வேளாண்மையில், ஒரே பயிர்களை தொடர்ந்து சாகுபடி செய்வதாலும் அதிக அளவில் இரசயாண உரங்களை பயன்படுத்தால் நிலத்தில் மண் வளம் குறைந்தும் மண்ணில் காணும் நுண்ணுயிர்களும் எண்ணிக்கைகளும் குறைந்து காணப்படுகிறது.

வேப்பம் இலைகள் ஒரு நல்ல பசுந்தழை உரமாகவும், ஆசாடிராக்டின் என்னும் மூலப்பொருளைக் கொண்ட வேம்பிலிருந்து கிடைக்கும் பொருள்களால் வேப்பம் எண்ணெயினை தெளிப்பதான் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களிடமிருந்து பயிர்களை பாதுகாப்புதனுடன் நம் சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லாமல் காக்கிறது. வேம்பினை பரவலாக்கம் செய்திட நம் கோவை மாவட்டத்திற்கு சூமார் 3,50,000 மரக்கன்றுகள் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் இலவசமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய இலக்குகள் பெறப்பட்டுள்ளது.

ஒரு எக்கரில் அடர்வுமுறையில் வேப்பங்கன்றுகளை பயிரிட சுமார் 200 கன்றுகள் தேவை என்பதுடம் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு உழவர் செயலியின் மூலம் அல்லது அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை
அனுகலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடாசலம்
தெரிவித்துள்ளர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe