கண்களை கட்டி கொண்டு சுருள்வாள் சிலம்பம் சுற்றி சாதனை செய்த மாணவன்

published 2 years ago

கண்களை கட்டி கொண்டு சுருள்வாள் சிலம்பம் சுற்றி சாதனை செய்த மாணவன்

 

கோவை: கோவையை சேர்ந்த பள்ளி மாணவன் கண்களை கட்டி கொண்டு,ஒரு கையில் சுருள்வாள்,ஒரு கையில் சிலம்பம் சுற்றியும், மற்றும் அடி முறை என  தொடர்ந்து 17  மணி நேரம் இரண்டு  உலக சாதனைகளை செய்து அசத்தியுள்ளார்.

கோவை சேரன் மாநகர்,பகுதியை சேர்ந்த மகேஷ் மற்றும் பகவதி ஆகியோரின் மகன் மிதுல் ஹரீஷ்.ஒண்பதாம் வகுப்பு படித்து வரும் இவர்,சிறு வயது முதலே சிலம்பம் சுற்றுவது,மற்றும் தமிழக அடி முறை கலைகளை முல்லை தற்காப்பு பயிற்சி மையத்தில் பயின்று வருகிறார்.இந்நிலையில் தனது தீவிர பயிற்சியால் தொடர்ந்து 17 மணி நேரம் சிலம்பம்,சுருள்வாள் மற்றும் அடி முறையில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

காலை நான்கு மணி முதல் கண்களை கட்டி கொண்டு ஒரு கையில் சுருள்வாள் இன்னொரு கையில் சிலம்பம் என தொடர்ந்து 13 மணி நேரம் சுற்றி சாதனை படைத்ததுடன் மீண்டும் தொடர்ந்து நான்கு மணி நேரம் அடிமுறையில், நிலை சுவடு முறைகளை நான்கு மணி நேரம் செய்து,  தனது 17 மணி நேர சாதனையை செய்து இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இரண்டு உலக சாதனைகளை ஒரே நேரத்தில் செய்த மாணவர் மிதுல் ஹரீஷை அவரது பெற்றோர்,ஆசிரியர்கள் ,பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe