தேசிய கல்விக் கொள்கை விவகாரம்- மத்திய அரசை கண்டித்து கோவையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்...

published 5 months ago

தேசிய கல்விக் கொள்கை விவகாரம்- மத்திய அரசை கண்டித்து கோவையில் திராவிடர்  கழகத்தினர் ஆர்ப்பாட்டம்...

கோவை: தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து வரும் நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக திராவிட கழகம் சார்பில் இன்று பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் உக்கடம் பகுதியில் திராவிடர் கழக இளைஞர் அணி- திராவிட மாணவர் கழகம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட திராவிடர் கழகத்தை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் மத்திய அரசு திணிப்பதாகவும், அதனை ஏற்க மறுத்தால் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe