MLA அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாடினார் எஸ்.பி.வேலுமணி...

published 4 weeks ago

MLA அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாடினார் எஸ்.பி.வேலுமணி...

கோவை: எம்.எல்.ஏ அலுவலகத்திலும் கட்சி அலுவலகத்திலும் ஆயுதபூஜை கொண்டாடினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

 

ஆயுதபூஜை தினமான இன்று பொதுமக்கள் அவர்களது இல்லத்திலும் தொழில் துறையினர் அவர்களது நிறுவனத்திலும் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை அலங்கரித்து வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சரும் கோவை தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ வுமான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும், கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்திலும் ஆயுத பூஜை விழாவை கொண்டாடினார். சாமி படத்தை வைத்து, பழங்கள், பொறிகடலை ஆகியவை வைத்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe