மேட்டுப்பாளையம் அருகே 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 2 weeks ago

மேட்டுப்பாளையம் அருகே 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை; மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கெண்டையூர் பகுதியில் மாதையன்(60) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இவர் வழக்கம் போல தோட்டத்திற்கு சென்ற போது அங்கு  மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு வனச்சரகர் ஜோசப் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் வைல்டுலைப் ரேங்லர்ஸ் குழுவைச்சேர்ந்த கிறிஸ்டோபர்,டேவிட், சாலமன்,கந்தசாமி உள்ளிட்டோர் நீண்ட நேரமாக போராடி சுமார்
11 அடி நீளமும்,17.650 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.பின்னர்,பிடிபட்ட மலைப்பாம்பை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் காப்பு காட்டில் விடுவித்தனர்.

விவசாய நிலத்தில் புகுந்த 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DBWRTPlgN-K/?igsh=dnQ5czczemRldGcz

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe