வாலாங்குளம் படகு சவாரி : கட்டணம் என்ன? எத்தனை பேர் செல்லலாம்? - முழு விவரம்

published 2 years ago

வாலாங்குளம் படகு சவாரி : கட்டணம் என்ன? எத்தனை பேர் செல்லலாம்? - முழு விவரம்

கோவை: கோவை வாலாங்குளத்தில் இன்று (புதன் கிழமை) முதல் படகு சவாரி துவங்க உள்ளது. எத்தனை படகுகள் உள்ளன. எவ்வளவு கட்டணம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணுங்கள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளக்கரைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.  இதில் உக்கடம்- சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள வாலாங்குளத்தின் கரைப்பகுதியில் நடைபாதை, சிறார்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், தண்ணீரில் நடந்து செல்லும் வகையில் மிதவை நடைபாதை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் மாநகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த வாலாங்குளத்தில் பொழுது போக்கு பயன்பாட்டுக்காக படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினருடன் இணைந்து ரூ.45 லட்சம் மதிப்பில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட்டது.

வாலாங்குளம் படகு இல்லத்தில் பெடல் படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் என மொத்தம் 20 படகுகள் இயக்கப்பட உள்ளன. பெடல் படகில் 2 பேர் செல்லலாம். துடுப்பு படகில் ஓட்டுபவர் உள்பட 4 பேர் செல்லலாம். மோட்டார் படகில் ஒரே சமயத்தில் 8 பேர் செல்லலாம்.

கட்டணம்

பெடல் படகுகளை பயன்படுத்த 30 நிமிடங்களுக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. துடுப்பு படகிற்கு ரூ.350ம், மோட்டார் படகுகளுக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தில் தற்காலிகமாக 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆகவே கோவை மக்களே உடனே புறப்பட்டு வாலங்குளம் படகு இல்லத்திற்கு சென்று ஜாலியா ஒரு 'போட் ரைட்' போலாம் வாங்க. இன்று முதல் (புதன் கிழமை) வாலாங்குளத்தில் படகு சவாரி துவங்குகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe