கோவையில் உதவி கமிஷனர் முன்னிலையில் உறுதிமொழியேற்ற மாணவர்கள்!

published 20 hours ago

கோவையில் உதவி கமிஷனர் முன்னிலையில் உறுதிமொழியேற்ற மாணவர்கள்!

கோவை: கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை மாநகரில் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு மா நகர போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இதனிடையே மாநகர காவல்துறை சார்பில் 36-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து உரையாற்றினார்.

பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலை விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe