சூலூர் பேரூராட்சியை நகராட்சியாக மாற்றக்கூடாது- திருவோடு ஏந்தி வந்து ஊர்மக்கள் கோரிக்கை...

published 1 day ago

சூலூர் பேரூராட்சியை  நகராட்சியாக மாற்றக்கூடாது- திருவோடு ஏந்தி வந்து ஊர்மக்கள் கோரிக்கை...

கோவை: அண்மையில் பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்றுவதற்கான தமிழக அரசின் அரசாணையானது வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி சூலூர் பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்பட உள்ளது. 

இந்நிலையில் சூலூர் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி சூலூர் பேரூராட்சியில் உள்ள கலங்கல் மற்றும் காங்கயம்பாளையம் கிராம ஊராட்சி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

சூலூர் நகராட்சியாக தரம் உயர்த்தும் பட்சத்தில் வரி அதிகரிக்கும் 100 நாள் வேலை திட்டம் பாதிக்கப்படும் காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் பாதிக்கப்படும் ஒன்றிய அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறிப்பிட்டனர். இதில் கலங்கல் பகுதி மக்கள் கையில் திருவோடு ஏந்தி வந்து மனு அளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe