வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது இது இருக்கனும்... கமிஷனர் சரவண சுந்தர் அறிவுரை

published 1 day ago

வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது இது இருக்கனும்... கமிஷனர் சரவண சுந்தர் அறிவுரை

கோவை: இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் ஹெல்மெட் அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கினார்.  

கோவை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் லாரி அசோசியேசன் சார்பில் 36வது சாலைப் பாதுகாப்பு மாத விழா கோவை அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் பகுதியில் நடத்தப்பட்டது.  

இதில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு ஹெல்மெட்  வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  

தொடர்ந்து சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் ஹெல்மெட் அணிய வேண்டும். அதேபோல நான்கு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் சீட் பெல்ட் அணிய வேண்டும்.  

சாலையில் செல்வோர் மிகவும் கவனமாக சாலை விதிமுறைகளைப் பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். பொதுமக்கள் எப்போதும் அக்கறையோடு செயல்பட வேண்டும்.   இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இந்த நிகழ்ச்சியில் உதவி கமிஷர்கள் உள்ளிட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe