தமிழ்நாடு சைக்கிளிங் லீக் இறுதிப்போட்டி: கோவை பெடல்ஸ் அணி வெற்றி

published 2 years ago

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் இறுதிப்போட்டி: கோவை பெடல்ஸ் அணி வெற்றி

கோவை: தமிழ்நாடு சைக்கிளிங் லீக் இறுதிப்போட்டி மெட்ராஸ் இண்டர்நேனல் சர்க்யூட்டில் நடைபெற்றது. அதன் இறுதிப்போட்டியில் கோவை பெடல்ஸ் அணி முதல் சீசனை வென்றது.

சைக்கிளிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன், அண்ணாநகர் சைக்கிள்ஸ் மற்றும் பிராண்ட் பிளிட்ஸ் இணைந்து தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) முதல் சீசனின் இறுதிப்போட்டியை மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடத்தியது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிசிஎல் இறுதிப்போட்டியில்  கோவை பெடல்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பையுடன் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நிப்பான் பெயின்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் திரு. அசோக் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கு பெற்றவர்களைக் கௌரவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago