கோவையில் வெறி நாய்களுக்கு விஷம் வைத்த மக்கள்- போலீஸ் விசாரணை!

published 3 weeks ago

கோவையில் வெறி நாய்களுக்கு விஷம் வைத்த மக்கள்- போலீஸ் விசாரணை!

கோவை: கோவையில் தெருவில் சுற்றித்திரிந்த வெறி நாய்களை விஷம் வைத்துக் கொன்ற குடியிருப்பு வாசிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியாக நடந்து செல்லும் நபர்களைத்  துரத்தியும், கடித்தும் அச்சுறுத்தி வந்தன.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் 15க்கும் மேற்பட்ட வெறி நாய்களுக்கு விஷம் வைத்துள்ளனர்.

இது தொடர்பாக விலங்குகள் நல வாரியத்திற்கு அந்த பகுதியைச் சேர்ந்த நபர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அங்கு சென்ற விலங்குகள் நல வாரியத்தினர். இறந்து கிடந்த நாய்கள் மற்றும் உயிருக்குப் போராடிய நாய்களை மீட்டு கோவை அரசு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

இறந்த நாய்களின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட போது, நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்தது.

இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் விலங்குகள் நல வாரியத்தினர் புகார் அளித்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வரும் நிலையில், பொதுமக்களே நாய்களை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago