பசியைத் தூண்டி உடல் பலத்தை அதிகரிக்கும் வேர்க்கடலை அல்வா

published 1 year ago

பசியைத் தூண்டி உடல் பலத்தை அதிகரிக்கும் வேர்க்கடலை அல்வா

தேவையான பொருட்கள்:

நிலக்கடலை பருப்பு: 500 கிராம்

சீனி: முக்கால் கிலோ

நெய்: 150 கிராம்

முந்திரிப்பருப்பு: 50 கிராம்

ஏலம்: 10 எண்ணம்

ஏலக்காய் பொடி: சிறிதளவு

ஜாதிக்காய்: 1 சிட்டிகை

செய்முறை:

நிலக்கடலைப் பருப்பை வறுத்து, மேல்தோலை நீக்கவும்.

வெள்ளைப் பருப்பாக 3 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.

ஊறவைத்த நிலைக்கடலையை மைய அரைத்து 200 மிலி நீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

முந்திரிப்பருப்பு, சாதிக்காய் ஆகியவற்றை நெய்யில் பொன்னிறமாக வறுத்து, ஏலக்காய். சாதிக்காயை மட்டும் பட்டுப்போல் பொடியாக்கிக் கொள்ளவும்.

400 மிலி தண்ணீரில் சீனியை கரைத்து அடுப்பில் ஏற்றி, கம்பி பதம் வருமாறு பாகு வைக்கவும்.

அரைத்து வைத்துள்ள வேர்க்கடலைக் கரைசலை கலந்து, மிதமான தீயில், அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

கெட்டியாள பக்குவம் வரும் சமயத்தில் நெய்யினை ஊற்றி தொடர்ந்து விடாமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.

பின் முந்திரிப்பருப்பை போட்டு நன்கு கிளறவும்.

பக்குவம் பார்த்து அடுப்பிலிருந்து கீழே இறக்கி சாதிக்காய், ஏலக்காய் பொடியினை தூவி கிளறி மூடி வைக்கவும்.

5 நிமிடம் கழித்து மீண்டும் கிளறி, பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.

மணமான, சுவையான, புதிதான பலகாரம் வேர்க்கடலை அல்வா-வை செய்து உங்கள் வீட்டில் எல்லோரையும் அசத்திருங்க...!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago