கோவை குண்டு வெடிப்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்- SDPI மனு...

published 1 month ago

கோவை குண்டு வெடிப்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்- SDPI மனு...

கோவை:கோவையில் 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு வருடம் தோறும் பாஜக, இந்து முன்னனி போன்ற இந்து அமைப்புகளின் சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஊர்வலத்திற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி குறித்து பாஜகவினர் மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில் பாஜக சார்பில் நடத்தப்படும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது, தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி SDPI கட்சியினர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து பேசிய அக்கட்சியின் SDPI செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன், பாஜகவினர் மக்களிடையே பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் வகையில் அந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தி வருவதாகவும் கோவையைப் பொறுத்தவரை அனைத்து மக்களும் ஒற்றுமையுடன்   வளர்ச்சியை மையப்படுத்தி வாழ்ந்து வரும் சூழலில் அவர்கள் மத துவேசத்தை கிளப்பும் வகையில் விஷ கருத்துக்களை பரப்பும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அந்த நிகழ்ச்சி சிறுபான்மை இன மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்திருப்பதாகவும்  எனவே மாநகர காவல் துறை இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தினார். அந்நிகழ்ச்சி பொதுப்பிரச்சனைக்காகவோ கோவையின் வளர்ச்சிக்காகவோ நடத்தவில்லை எனவும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் வன்முறையை ஏற்படுத்த வேண்டும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை அரங்கேற்றி அரசு லாபம் அடைய வேண்டும் என்ற அடிப்படையில் தான் அந்த நிகழ்ச்சியை நடத்தி வருவதாக விமர்சித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago