தைபூசம்- கோட்டை ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்- கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள்...

published 1 month ago

தைபூசம்- கோட்டை ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்- கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள்...

கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் முருகனுக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தின் துவக்க நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். 

மேலும் இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

தேரானது கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு புறப்பட்டு ஈஸ்வரன் கோவில் வீதி, இக்பால் தெரு, பெருமாள் கோவில் வீதி ஒப்பணக்கார வீதி டவுன்ஹால் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைகிறது. எனவே இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், சங்கமேஸ்வரர் கோவிலுக்கு எங்குமில்லாத சிறப்பு உள்ளது என்றும் வருடத்தில் அனைத்து நாட்களிலும் இங்குள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுவதாக தெரிவித்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கார் வெடிகுண்டு சம்பவம் நடந்ததை குறிப்பிட்ட அவர் அது மத அடிப்படைவாதியில் திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும் ஆனால் மாநில அரசு இன்னும் சிலிண்டர் வெடி விபத்து என்கின்றது எனக் கூறினார்.

கோவை மக்களை காப்பாற்றியவர் சங்கமேஸ்வரர் , எனவும் 20 வருடங்களாக நின்றிருந்த தேர்த்திருவிழா சமீப காலமாக தான் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்த அவர் அதேசமயம் சிவராத்திரி அன்று திருத்தேர்விழா இங்கு விமர்சையாக நடைபெறும், ஆனால் 30 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளதை மீண்டும் நடத்த வேண்டும் என்று பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை முன்வைத்து வருகிறார்கள் என தெரிவித்தார்.

சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு முன் வைத்ததாகவும்  கோரிக்கை முன்வைத்து ஒரு வருடங்கள் ஆகியும் தற்பொழுது வரை நிறைவேற்றப்படவில்லை என்றார்.இந்த நாடு சனாதனம் தர்மத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஊறியது என்றும் தெரிவித்தார்.

சமீப காலமாக சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிகளுக்கு, இந்து கோவில்களுக்கு தொந்தரவு  கொடுப்பது,  இந்துக்களுக்கு இழிவு செய்வது, இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் தங்களின் சிறுபான்மை அரசியல் செய்து வருகிறார்கள் என்றும்
திமுகவினர் மற்றும் அவர்களின் கூட்டணியில் உள்ள கட்சியினர் ஒரு மலையின் பெயரை மாற்றவே உறுதுணையாக இருப்பது வெட்கக்கேடானது என்றார்.

சனாதனா தர்மத்திற்கு ஆபத்து வரும் பொழுது சமூகமே தானாக வந்து காத்துக் கொள்ளும் நிலை இங்கு உருவாகிறது என தெரிவித்தார். இந்து கோவில்கள் பிரச்சனை பற்றி மற்ற எந்த கட்சிகளும் வாய் திறப்பதில்லை எனவும், யாருமே பேசாத போது பாஜக, இந்து மக்கள் கட்சி போன்ற இயக்கங்கள் நாங்கள் போராடும் கட்டாயம் ஏற்படுகிறது என்றார்.

ஒரு சில கோவில்களில் வசதி மிக குறைவாக உள்ளது எனவும்  பேரூர் கும்பாபிஷேக விழாவில் கூட்டத்தை கையாளும் திட்டத்தை முன் கூட்டியே போடவில்லை எனவும் கூறிய அவர் கோவில் சார்ந்த விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மாநில முதல்வரே இந்து திருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்வதில்லை,  கட்சியை சேர்ந்தவர்கள் பல விமர்சனங்களை வைக்கின்றனர் எனவும் போது  அதை பார்க்கும் அதிகாரிகள் எப்படி வேலை செய்வார்கள்?? என கேள்வி எழுப்பினார்.


தவெக தலைவர் விஜய் தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறித்தான கேள்விக்கு , தைப்பூசத்திற்கு வாழ்த்து சொல்ல கூடிய அனைவருக்கும் பாராட்டு என்றும் வாழ்த்து சொல்லியர்களுக்கு நன்றி சொல்லக்கூடிய நிலை தமிழ்நாடு வந்திருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.
விஜய், பிரசாந்த் கிஷோரை சந்தித்தது குறித்தான கேள்விக்கு அதற்கு நாங்கள் என்ன கருத்து சொல்வது? எனவும் அவருடைய தேர்தல் வெற்றிக்காக அவர்கள் சந்திக்கிறார்கள் என்றார்.

பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் அங்கு அவருக்கான வசதியை அரசு செய்து கொள்ள வேண்டும், எனவும் மகா கும்பமேளாவிற்கு கோடிக்கண மக்கள் தினமும் வருகிறார்கள் ஆனால் அங்கு ஏற்பாடு செய்கிறார்கள் எனும் போது இங்கே ஏன் செய்ய முடியவில்லை?என கேள்வி எழுப்பினார்.

பாஜகவை விட கடவுள் இல்லை என்று சொல்லக்கூடிய நபர்கள்தான் அதிகம் கோவிலுக்கு சென்று கயிறு கட்டி கொள்கிறார்கள் என கூறி புறப்பட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago