கோவையில் ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை பொது நிறுவனகுழு...

published 3 weeks ago

கோவையில் ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை பொது நிறுவனகுழு...

கோவை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவினர் அரசு மாணவர்கள் தங்கும் விடுதிகள், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்று கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.  

பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழு A.P.நந்தகுமார் கூறும் போது :-

கோவையில் உள்ள ஆதிதிராவிட மாணவியர் விடுதியில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டப்பட்டு வருகிறது, விடுதி கட்டப்படுகிற தரம், எத்தனை நாட்களில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்பதை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்ததாகவும், அந்த விடுதி குறிப்பிட்ட காலத்திற்குள் மாணவியருக்கு பயன் தரக் கூடிய வகையிலே அந்த கட்டிடத்தை விரைந்து முடித்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும், 

அதைத்  தொடர்ந்து டைட்டில் பார்க்கில் 17 லட்சம் சதுர அடியில் சிறப்பாக இயங்கிக் கொண்டு உள்ளதாகவும், அந்த டைட்டில் பார்க்கில் கோவையை சுற்றி உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்பில் முன்னுரிமை  கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் எனவும் கூறியவர், அதன் பிறகு தமிழ்நாட்டில் முதல்முறையாக நான்கு கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், food committee testing laboratory, அமைக்கப்பட்டு உள்ளது அதையும் இந்த குழுவானது ஆய்வு செய்து உள்ளதாகவும், 

ஏழை - எளிய மக்களுக்கு, உணவுப் பொருட்கள் தரமானதாக செல்கிறதா ? என்பதை  கேட்டு அறிந்தோம் என்றும் கூறியவர், மாநகராட்சியில் குடிதண்ணீர் எப்படி வழங்குகிறார்கள் ? என்பதை சென்று ஆய்வு செய்தோம், அம்ருத் திட்டத்திலும் குடிதண்ணீர் எப்படி ? வழங்கப்படுகிறது  என்பதை மாநகர ஆணையாளரிடம் கேட்டு அறிந்ததாகவும் தெரிவித்தவர், சில பகுதிகளில் தினம் தோறும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கக் கூடிய நிலை, என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வழங்கப்படுகிறது என்றும் விரைவில் இவை அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, அனைத்து மக்களுக்கும் எந்த நேரத்திலும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்று கோவை மாநகர ஆணையாளர் உறுதி அளித்து உள்ளதாக தெரிவித்தார்.

இதுபோன்ற கோவையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த அவர்கள் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.

ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் எது போன்று ஆய்வு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு :

தரம், கட்டிடம் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றும், மணலில் எம் சாண்ட் உள்ளிட்டவை தரமானதாக இருந்ததா ? என்பதை ஆய்வு செய்தோம் என்று கூறினார்.

அதேபோல சூயஸ் திட்டத்தில் , pumping system கிடையாது, அனைத்துமே gravity-ல் நீர் வருவதாக கூறினார்கள். மேலும் சூயஸ் திட்டம் மற்றும் அம்ருத் திட்டம் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், முடிவடைந்ததும் 24 மணி நேரம் குடிநீர் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டு இருப்பதாகவும், அதேபோல குறிப்பாக பொது விநியோகத் திட்டத்தில் கையிருப்பு இல்லை என்று, எங்கும் பார்க்கவில்லை என்றவர், நாங்கள் ஆய்வுக்கு சென்று பார்த்த போது எந்தெந்த பொருட்கள் மாதம்தோறும் வழங்க வேண்டுமோ ? அந்த பொருட்கள் எல்லாம் ஸ்டாக்கில் இருந்தது. 

அதேபோல பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலம், 20 ப்ராசஸ் கடந்த பிறகு தான் பொதுமக்களின் விநியோகத்திற்கு பொருட்கள் செல்வதாகவும் அங்கு கூறியிருக்கிறார்கள் என்று கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago