கோவை வரும் அமித்ஷாவிற்கு கருப்பு கொடி காட்டிய இயக்கங்கள்...

published 2 weeks ago

கோவை வரும் அமித்ஷாவிற்கு கருப்பு கொடி காட்டிய இயக்கங்கள்...

கோவை- தமிழ்நாட்டில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கோவைக்கு வருகை தர உள்ளார்.

கோவைக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பீளமேடு பகுதியில், தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் அனைத்து அம்பேத்கர், பெரியாரிய இயக்கங்கள் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாஜகவின் உள்துறை அமைச்சர்  அமித்ஷாவை தமிழ்நாட்டிற்குள் நுழையாதே.. திரும்பிப் போ...# go back Amit Shah என்ற வாசகங்கள் கொண்ட முழக்கத்துடன் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 அதோடு மத்திய பாஜக அரசே தமிழ்நாட்டின் வருமானத்தை சுரண்டதே என்றும், ஹிந்தி மொழியை திணிக்காதே கல்வி நிதியை தடுக்காதே தமிழ்நாட்டை வஞ்சிக்காதே என, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
Go back Amit Shah  என்ற வாசகத்துடன் 200க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உட்பட  அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago