breaking news : கோவையில் கோர விபத்து : ஓணம் பண்டிகையை கொண்டாடி திரும்பிய நிலையில் 120 அடி பள்ளத்தில் விழுந்த கார்

published 2 years ago

breaking news : கோவையில் கோர விபத்து : ஓணம் பண்டிகையை கொண்டாடி திரும்பிய நிலையில் 120 அடி பள்ளத்தில் விழுந்த கார்

கோவை: கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாடி விட்டு வரும் வழியில் 120 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ரோஷன்(18) தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று அதிகாலை காரில்(Suzuki Iszusu) நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார்.

அவர்களது கார்  தென்னமநல்லூர் பகுதியில் வளைவில் திருப்பும் போது கட்டுப்பாட்டை இழந்தது.

தொடர்ந்த்ய் மாரப்ப கவுண்டர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் இரும்பு கேட்டை உடைத்து கொண்டு சுமார் 120. அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்துள்ளது.

முன்னதாக இதில், காரை ஓட்டி வந்த ரோஷன் கதவை திறந்து வெளியே விழுந்து விட உடன் வந்த நண்பர்கள் ஆதர்ஷ்(18), விவேக்பாபு(18), நந்தனன்(18) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அவர்கள் அனைவரும் கோவையில் வெவ்வேறு தனியார் கல்லூரியில் பயின்றவர்கள்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் காரையும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களையும் மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe