டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

published 2 years ago

டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

 

கோவை: கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் (கோவை மாநகர்/புறநகர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி) ஆலோசனைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில், கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

1) எந்தவித குறைபாடும் இல்லாமல், டாஸ்மாக் விதிகளுக்கு உட்பட்டு திறம்பட பணியாற்றி வரும் பணியாளர்களை எவ்வித காரணமும் இல்லாமல், அவர்களை இடையூறு செய்து, ஊழியர்களின் விருப்பமின்றி, டாஸ்மாக் விதிகளுக்கு புறம்பாக வழங்கி வரும் பணியிட மாறுதல்களை டாஸ்மாக் அதிகாரிகள் நிறுத்த வேண்டும்.

2) தொழிலாளர் விரோத போக்கினை கைவிட்டு நடுநிலையுடன் நிர்வாகத்தை நடத்த வேண்டும்.

3) தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள பணியாளர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும்.

4) ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு உடனடியாக பண பயன்கள் வழங்க வேண்டும்.

5) இறந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய பண பயன்களை கால தாமதம் இன்றி வழங்க வேண்டும்.

6)தொழிலாளர் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை காத்திடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி புரட்சிகரமான பல போராட்டங்களை வெகு விரைவில் நடத்துவது.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் அசோக் குமார்  (கோவை மாநகர் மாவட்ட அ.தொ.சங்க செயலாளர்) கண்ணன் (பொருளாளர்) 
திரு .வி.சி. சரவணன் (டாஸ்மாக்-மாநில தலைவர்) கோவை  மாநகர் மாவட்ட  நிர்வாகிகள் : எம். நெடுமாறன் (செயலாளர்) 
பி.முத்தையா (துணைத்தலைவர்) ஜெ.ஜெயகுமார் (துணை தலைவர்)

கோவை புறநகர் மாவட்ட நிர்வாகிகள்: திரு.R.செந்தில்குமார் (செயலாளர்) திரு.V.செந்தில்குமார் (தலைவர்) முத்துபாலகன் (துணை செயலாளர்) திருப்பூர்: திரு.மு.பேச்சிமுத்து (செயலாளர்) 
திரு ஏ.கே. செல்வராஜ் (தலைவர்) திரு.R.ஆண்டனி (பொருளாளர்)
ஆர்.ராஜன் (இணை செயலாளர்).

ஈரோடு: திரு.மாணிக்கம் (தலைவர்), தர்மராஜ்(ஈரோடு கிழக்கு மாவட்ட அ.தொ.ச இணை செயலாளர்) 
கிருஷ்ணன் (துணை தலைவர்), கார்த்திக்.

நீலகிரி: சிவராஜ் (இணை செயலாளர்)  
முரளி(துணை தலைவர்) உள்ளிட்ட நிர்வாகிகளும், கழக முன்னோடிகளும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe