தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்ட அறிவுப்பு பலகையை வைக்கக்கோரி மனு

published 2 years ago

தனியார் பள்ளிகளில்  கட்டாய கல்வி உரிமைச்சட்ட அறிவுப்பு பலகையை வைக்கக்கோரி மனு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை தனியார் பள்ளிகள் முறையாக பின்பற்றுவதில்லை என்றும், இது தொடர்பான அறிவிப்பு பலகையைத் தனியார் பள்ளிகள் முன்பு வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சமூக நீதிக்கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமூக நீதிக்கட்சியினர் இன்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009ன் (ஆர்.டி.இ) படி, தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி வருகின்றன. தனியார்  பள்ளிகள் இந்த நிதியைப் பெற்றுக் கொண்டு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து ஆண்டுதோறும் புகார் அளித்து வருகிறோம்.

தனியார் பள்ளிகளான ஜி.டி மற்றும் பி.எஸ்.ஜி, கிருஷ்ணம்மாள் உள்ளிட்ட பல பள்ளிகளில் இதுகுறித்து அறிவுப்பு பலகை வைக்காமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கேட்டால் அவர்களை மிரட்டி வருகின்றனர்.

எனவே இந்த பிரச்சனையில் தலையிட்டு, அனைத்து தனியார் பள்ளிகள் முன்பும் இச்சட்டம் குறித்த அறிவிப்பு பலகை வைப்பதோடு, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe