கோவையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் 77-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

published 2 years ago

கோவையில் முன்னாள்  நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் 77-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

 

கோவை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அவர்களின் 77-வது பிறந்தநாளையொட்டி கோவையில், கோவில்களில் சிறப்புப் பூஜை ,ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னான் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை  உறுப்பினருமான ப.சிதம்பரத்தின் 77-வது பிறந்தநாளையொட்டி, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஹரிஹரசுதன் தலைமையில் கோவையில் சிறப்புப் பூஜைகள், வழிபாடு, அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி , ஐ.என்.டி.யூ.சி . பொதுச்செயலாளர் கோவை செல்வன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் முன்னதாக  பீளமேடு ஸ்ரிங்கார் நகர் சீரடி துவாரகாமயி சாய்பாபா கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து,  உக்கடம் ஜி.எம்.நகரிலுள்ள டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கப்பட்டது.

பின்னர்,ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, மதியம் திருச்சி ரோட்டிலுள்ள ஜங்கிள் பீர் அவுலியா தர்காவில் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து, மாலை  காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில்,  மாவட்ட பொருளாளர் சௌந்தர குமார், பேரூர் திருமூர்த்தி, சோபனா செல்வன், கருணாகரன், ஜெரி லூயிஸ், தென்றல் நாகராஜ், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe