பெற்றோர்களே உஷார்.. கோவையில் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல்.

published 2 years ago

பெற்றோர்களே உஷார்.. கோவையில் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல்.

 

கோவை: கோவையில் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பெற்றோர் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக கொரோனா, தக்காளி காய்ச்சல், குரங்கு அம்மை என பல நோய்கள் குழந்தைகளை தாக்கி வருகின்றன.

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.

பருவ கால மாற்றத்தால் நோய்கள் வந்து சென்றாலும் அது பெருமளவில் அதிகரிக்கும் போது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதனிடையே தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சளி காய்ச்சல் தொந்தரவுகளால் குழந்தைகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி, காரைக்காலில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகள் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோவையிலும் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் கடந்த மாதத்தில் 801 குழந்தைகள் காய்ச்சல் பாதிப்பு காரணமாக உள் மற்றும் வெளி நோயாளிக்ளாக சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளனர்.

நடப்பு மாதத்தில் மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் 429 குழந்தைகள் காய்ச்சல் பாதிப்பு காரணமாக உள் மற்றும் வெளி நோயாளிக்ளாக சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளனர்.

இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும்  குழந்தைகள் எண்ணிக்கை கோவையில் அதிகரித்துள்ளது

முறையாக முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, நீரைக் கொதிக்க வைத்து, ஆறவைத்து குடிப்பது, தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகியவற்றின் மூலம் இதனை தவிர்க்க முடியும் என்றும், குழந்தைகளுக்குகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், காய்ச்சல் பாதித்த ஒரு குழந்தையின் இருமல், தும்மல் ஆகியவற்றின் போது வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலமாகத்தான் இவ்வகை காய்ச்சல் பரவுகிறது என்றும், குழந்தைக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொண்டையில் புண்கள், கை கால் வலி, அதிகபட்ச சோர்வு ஆகியவை இந்த மர்ம காய்ச்சலின் அறிகுறிகள் என்றும் இவ்வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏழு முதல் எட்டு நாள் வரை பாதிப்பு இருக்கும் என்றும்  மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே கோவை மக்களே உஷாராக இருங்கள் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe