"உயிரோடு இருக்கும் வரை அரசன் தான்..!" : பாகுபலி போல் உதவிய எஸ்.பி.வேலுமணி

published 2 years ago

"உயிரோடு இருக்கும் வரை அரசன் தான்..!" : பாகுபலி போல் உதவிய எஸ்.பி.வேலுமணி

கோவை: பதவி இல்லமல் இருந்தாலும் ரூபாய் ஒரு கோடியே 21 லட்சம் மதிப்பிலான மருத்துவ உதவி தொகையை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கி முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி வழங்கியுள்ளார்.

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் 1954 முதல் 1987 ஆம் ஆண்டு வரை டர்னர் அண்ட் நிவால் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ நிதி உதவி வழங்கும் விழா கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி 64 பேருக்கு ஒரு கோடியே 21 லட்சம் மதிப்பிலான மருத்துவ நிதி உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்த உதவித்தொகையை வழங்குவதற்காக எஸ்.பி.வேலுமணி அழைக்கப்பட்டிருந்தாலும், கூட்டத்தில் இருந்த ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து அசத்தியிருக்கிறார் எஸ்.பி.வேலுமணி.

இவர் மக்களுக்கு செய்த உதவிகளை பார்த்து கூடியிருந்த மக்கள் "இவர் எப்பவுமே நம்ம அமைச்சர் தான்" என்று கூறியபடி சென்றது நம்மால் கேட்க முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் மற்றும் முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் மற்றும் மதுக்கரை ஒன்றிய கழகச் செயலாளர் சண்முகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe