கோவையில் கல்லூரி மாணவன் ஓட்டி வந்த புல்லட்- குழந்தையின் மீது ஏறி இறங்கி விபத்து- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்...

published 1 week ago

கோவையில் கல்லூரி மாணவன் ஓட்டி வந்த புல்லட்- குழந்தையின் மீது ஏறி இறங்கி விபத்து- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்...

கோவை: கோவையில் கல்லூரி மாணவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மூன்று வயது குழந்தையின் மீது ஏறி இறங்கி விபத்துக்குள்ளானது.


கோவை, கண்ணப்பன் நகர் பகுதியில் வசித்து வரும் சத்திய நாராயணன் என்ற கல்லூரி மாணவன், ஞாயிற்றுக்கிழமை அன்று தனது புல்லட் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று உள்ளார். அப்போது முருகன் நகர் பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த மூன்று வயது குழந்தை ஒன்று எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற போது, இருசக்கர வாகனம் குழந்தையின் மீது ஏறி இறங்கியது. 

இந்த விபத்தில் குழந்தை படுகாயம் அடைந்தது. உடனடியாக அக்கம், பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினரின் விசாரணையில் குழந்தையின் பெயர் லித்தீஷ் என்பதும், குழந்தைக்கு மூன்று வயது நடக்கிறது என்பதும் தெரிய வந்தது. இந்த விபத்தின் அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

இந்த சம்பவம் குறித்து காந்திபுரம் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகமாக வாகனம் ஓட்டிய கல்லூரி மாணவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/8hF6c6SY1AQ?si=FpgMYqiXecpBJsQE

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe