பரம்பிக்குளம் அணையின் ஷட்டர் சேதம்: தமிழக அரசு பழுது வேலை

published 2 years ago

பரம்பிக்குளம் அணையின் ஷட்டர் சேதம்: தமிழக அரசு பழுது வேலை

 

பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம் அணையின் மூன்று ஷட்டர்களில் ஒன்று நேற்று அதிகாலை 2 மணியளவில் சேதமடைந்ததால் அதிரப்பள்ளிக்கு 16,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் நீர்வள அமைப்பு (WRO) போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த ஷட்டரை சீரமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. அணை கேரளாவில் இருந்தாலும், அதன் பராமரிப்பு தமிழகத்திடம் உள்ளது. தலைமைப் பொறியாளர் - செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக் குழு பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அணைப் பகுதிக்கு வந்திருந்தனர்.

வழக்கமாக 10 செ.மீ உயர்த்தப்படும் ஷட்டர், 25 அடி முழு உயரத்திற்கும் தானாகத் திறந்துகொண்டது. WRO-இன் பொறியாளர்கள், சங்கிலி வெட்டப்பட்டதால், எதிர் முனையில் உள்ள ஷட்டர்களின் எடையால் அது தானாகத் திறந்துகொண்டதாக சுட்டிக்காட்டினர். அணையின் மொத்த உயரமான 72 அடியில், செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி 71.45 அடி இருப்பு உள்ளது. இதில் 5 டி.எம்.சி.அடி நீர் கேரளாவுக்கும் செல்லும் என்றும் மீதமுள்ள 12 டி.எம்.சி. அடி நீர் சேமிப்பில் இருக்கும் என்றும் கூறினர்.

மறுசீரமைப்பு பணிகளைத் தொடங்கிய WRO அதிகாரிகள், அணையின் ஷட்டரை முழுவதுமாக மாற்ற வேண்டும் என்றும் அதற்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகும் என்றும் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன், அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் ஷட்டர் மாற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை அணையை ஆய்வு செய்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் எஸ்.துரைமுருகன் கூறியதாவது:

"மாநிலத்தில் அணை பாதுகாப்பு குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

பரம்பிக்குளத்தின் நிலைமை துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய அவர், இவ்வளவு அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவது வருத்தமளிப்பதாகக் கூறினார். மற்ற இரண்டு ஷட்டர்களின் நிலையை ஆய்வு செய்ய முயற்சி எடுக்கப்படும்." என்றார். கேரளா மற்றும் தமிழக அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்று கூறப்படும் செய்திகளை நிராகரித்த அவர், இரு மாநிலங்களுக்கும் இடையே சுமுகமான உறவு நிலவுவதாகக் கூறினார்.

இந்த ஆய்வின்போது மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மேயர் ஏ.கல்பனா, கேரளாவின் நென்மாரா எம்.எல்.ஏ கே.பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe