ஹோட்டல் ஸ்டைலில் மிருதுவான ருமாலி ரொட்டி… செய்முறை இதோ…

published 2 years ago

ஹோட்டல் ஸ்டைலில் மிருதுவான ருமாலி ரொட்டி… செய்முறை இதோ…

 

தேவையான பொருட்கள்:

மைதா மாவு- 2 கப்

கோதுமை மாவு- 1 கப்

பால், உப்பு, எண்ணெய்: தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை உப்பு சேர்த்து கலக்கவும்.

பின்னர் அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி கெட்டியாக பிசையவும்.

கடைசியாக அதில் எண்ணெய் ஊற்றி பிசைந்து ஈரத்துணியால் மூடி 1 மணி நேரம் வைக்கவும்.

பின் தேவையான அளவில் மாவு உருண்டையை எடுத்து நன்கு மெலிதாக தேய்க்கவும்.

நான்ஸ்டிக் தவாவை குப்புற கவிழ்த்தி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

தேய்த்த ரொட்டியை போட்டு வேக வைக்கவும்.

ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஹோட்டலில் சாப்பிடுவது போன்ற மிருதுவான, சுவையான ருமாலி ரொட்டி வீட்டிலே தயார்...
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe